×

வேலூர் மாவட்டத்தில் புயலால் சேதமான பயிர்களுக்கு ₹22.40 லட்சம் இழப்பீடு கேட்டு அரசுக்கு அறிக்கை; வேளாண் அதிகாரிகள் தகவல்

வேலூர், டிச.27: ேவலூர் மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் மழையால் 132.60 ஹெக்டேர் பரப்பிலான பயிர் சேதத்திற்கு ₹22.40 லட்சம் இழப்பீடு கேட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது.

வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய 5 ஒன்றியங்களில் பயிரிடப்பட்டிருந்த 132.60 ஹெக்டர் நெல், மணிலா ஆகியவை சேதமானது. இதனால் 241 விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு இழப்பீடாக ₹22.40 லட்சம் இழப்பீடு கேட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன்பேரில் அரசு நிதி ஒதுக்கீடு செய்ததும் பாதிக்கப்பட்ட 241 பேருக்கும் இழப்பீடு தொகை விரைவில் வழங்கப்படும் என மாவட்ட வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post வேலூர் மாவட்டத்தில் புயலால் சேதமான பயிர்களுக்கு ₹22.40 லட்சம் இழப்பீடு கேட்டு அரசுக்கு அறிக்கை; வேளாண் அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Govt ,Vellore district ,Vellore ,Migjam ,Dinakaran ,
× RELATED வேலூர் மாவட்டத்தில் சீல் இன்றி...